2017-02-08

புதுச்சேரியில் உள்ள மஹி இல் பிறந்து, Pennsylvania வில் உள்ள Philadelpia வில் வளர்ந்த Manoj Night Shyamalan, அமெரிக்க திரை உலகுடன் சங்கமிதுவிட்ட ஓர் எழுத்தாளர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநர். புரிந்து கொள்ள சற்று கடினமான கதை கருக்களை வித்தியாசமான முறையில் திரையில் தீட்டுவதில் சமர்த்தர்!

'The Sixth Sense'(1999), 'Unbreakable'(2000), 'Signs'(2002), 'The Village'(2004), 'Lady in the Water'(2006), 'The Happening'(2008), 'The Last Airbender'(2010), 'After Earth'(2013) போன்ற மாறுபட்ட படங்களை வழங்கியவர். இந்திய அரசாங்கம், 2008 இல், அவருக்கு 'Padmasri' வழங்கி சிறப்பித்தது, குறிப்பிடத்தக்கது.

Kevin Wendell Crumb(James McAvoy), 23 வித்தியாசமான குண இயல்புகள் கொண்ட ஒரு விசித்திரமான மனிதன்! சிறிய வயதில் ஏற்பட்ட கசப்பான பல அனுபவங்களால், இந்த மாதிரியான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டவன்! Claire(Haley Lu Richardson), Marcia(Jessica Sula) மற்றும் Casey(Anya Taylor-Joy) ஆகிய மூன்று இளம் பெண்களை கடத்தி, தனியொரு இடத்தில் அடைத்து வைக்கிறான்!

Kevin இன் மனநிலை மருத்துவரான Dr. Karen Fletcher(Betty Buckley), Kevin இன் நிலை பற்றியும், அவனது 23 வகையான குணதிசய இயல்புகள் பற்றியும் நான்கு உணர்ந்தவர். Barry, Patricia மற்றும் Dennis போன்ற பெயர்களுடன் மாறுபட்ட குண இயல்புகளை Kevin வெளிப்படுத்தும் விதம் பற்றியும் நன்கு அறிந்தவர்! இளம் பெண்களை அரைகுறை ஆடைகளுடன் ஆடவைத்து பார்ப்பதில் தனியொரு சந்தோஷம், Kevinக்கு!

Claireயும் Marciaவும் Dennisஐ கொல்ல முயற்சி செய்ய, Casey, அம்முயற்சியை கைவிடுமாறு செய்கிறாள்! காரணம்? Kevin போல, அவளும் கூட, சிறு வயதில், கசப்பான அனுபவங்களுக்கு உட்படுத்த பட்டதுதான்! அதனால் எழுந்த அனுதாபம் போலும்!

Hedwig என்கிற ஒரு ஒன்பது வயது பாலகன் 'அவதாரம்' மூலமாக, Kevin 'Beast' என்கிற 24th 'அவதாரம்' பூண்டு, அவர்களை கொல்ல முடிவு செய்துள்ளதாக அறிய வரும் மூவரும் அதிற்கிறார்கள்! முடிவில் என்ன நடக்கிறது என்பதுதான், படத்தின் உச்ச கட்டம்!

West Dylan Tordson இசை அமைக்க, Mike Giuolikas ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Manoj Night Shyamalan இன் திரைக்கதையும் இயக்கமும் படம் பார்ப்பவர்களுக்கு புதியதொரு அனுபவத்தை தரும்!

Show more